இரண்டே நாளில் வீட்டை கட்டி முடிக்கும் ரோபோ.
வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை செய்து பார் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. வீடு கட்டுவதும், திருமணம் செய்வதும் ஒரு மிகப்பெரிய வேலை. பலவித தடங்கல்கள், நேரம், அலைச்சல் ஆகியவை இவை இரண்டிலும் ஏற்படும்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இரண்டே நாட்களில் ஒரு முழுவீட்டை கட்டும் வகையில் ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மணிக்கு 1000 செங்கல்களை அடுக்கி, 24 நேரமும் தொடர்ச்சியாக வேலை செய்து இரண்டே நாட்களில் ஒரு வீட்டை கட்டி சாதனை செய்துள்ளது.
Hadrian X என்று கூறப்படும் இந்த ரோபோ மிக வேகமாக வீட்டை கட்டி முடிப்பதால் செலவு குறைவதோடு, நேரமும் பெருமளவு மிச்சப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.