முதன்முதலாக ஒரே படத்தில் இணணயும் சிம்பு-தனுஷ்

முதன்முதலாக ஒரே படத்தில் இணணயும் சிம்பு-தனுஷ்

Simbu_Dhanush dhanush simbuஎம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய்யை அடுத்து கோலிவுட் திரையுலகில் இருதுருவங்களாக இருப்பவர்கள் சிம்பு-தனுஷ். இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் மோதிக்கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது என்பது சாத்தியமில்லை என்று கூறப்பட்ட நிலையில் முதல்முறையாக தெலுங்கு படம் ஒன்றில் இருவரும் ஆளுக்கொரு பாடலை பாடியுள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ் நடித்துள்ள ‘திக்கா’ என்ற படத்தில் சமீபத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடினார். இந்த பாடல் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இதே படத்தில் சிம்புவும் ஒரு பாடலை பாடியுள்ளார். இருதுருவங்களையும் ஒரே படத்தில் இணைத்த பெருமை பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் அவர்களை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply