ஹாலிவுட் ஸ்டுடியோவில் ஆரம்பமாகும் ‘தல 57’

ஹாலிவுட் ஸ்டுடியோவில் ஆரம்பமாகும் ‘தல 57’

thala-571பெரும்பாலான ஹாலிவுட் படங்கள் படமாக்கப்பட்ட Nu Boyana Film Studios என்ற ஸ்டுடியோ பல்கேரியாவில் உள்ளது. ஒரு நாள் படப்பிடிப்புக்கே பல லட்சங்கள் பில் போடப்படும் இந்த ஸ்டுடியோவில் சில்வர்ஸ்டர் நடித்த The Expendables உள்பட பல படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த ஸ்டுடியோவில் அஜித் நடிக்கவுள்ள 57 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பின்னணியில் அழகிய மலை உள்பட இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஸ்டுடியோவில் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் அஜித், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், கருணாகரன், தம்பிராமையா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கவுள்ளனர்.

Leave a Reply