என்னை விட தகுதி வாய்ந்தவர் ஹிலாரி கிளிண்டன். ஒபாமா புகழாரம்
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக அதிபர் ஒபாமாவும் தற்போது களமிறங்கியுள்ளார்.
நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ஒபாமா, “ஹிலாரி கிளிண்டனுக்கு வெள்ளை மாளிகைக்கு செல்ல அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவர் மக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் தன்மை கொண்டவர். ஹிலாரி தமது கொள்கையில் இருந்து எப்போதுமே பின்வாங்கியதில்லை. என்னை விடவும், பில் கிளிண்டனை விடவும், மற்ற ஆண், பெண்களை விடவும் அமெரிக்க அதிபராகி சேவையாற்றும் தகுதி உள்ளவர் என ஹிலாரியை புகழ்ந்து பேசினார்.
கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஹிலாரிக்கு ஆதரவாக இருப்பதால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக அவர் பதவிக்கு வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அவர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அவரது அதிரடியான பேச்சுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.