1977க்கு திரும்பிய தனுஷ்
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை ஸ்டுடியோ ஒன்றில் மத்திய சிறை போன்ற செட்டில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கடந்த 1977ஆம் ஆண்டு கால பாணியில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
‘வடசென்னை’ திரைப்படம் 40 ஆண்டுகால நிகழ்வுகளை தெரிவிக்கும் படம். 1977ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை நடைபெறும் நிகழ்வுகளை கூறும் இந்த படத்தில் தற்போது 1977ஆம் ஆண்டுக்குரிய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.