தயாரிப்பாளராக மாறிய ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி
ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி ஏ.ஆர்.ரஹைனா பிரபல பாடகி என்பதும் அவர் ஒருசில படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இவர் பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷின் அம்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹைனா தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். ‘யோகி அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள ரஹைனா தயாரிக்கும் முதல் படத்திற்கு ‘ஏண்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கல’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அசார் என்னும் புதுமுகம் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக ‘சூதுகவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹைனா தயாரிக்கும் 2வது படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பார் என தெரிகிறது.