இந்தியாவின் 23 ரயில் நிலையங்களில் அதிவேக இலவச வைஃபை. கூகுள் சுந்தர்பிச்சை தகவல்

இந்தியாவின் 23 ரயில் நிலையங்களில் அதிவேக இலவச வைஃபை. கூகுள் சுந்தர்பிச்சை தகவல்

sundharஇந்தியாவில் உள்ள 23 ரெயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியை கூகுள் வழங்கி வருவதாகவும் விரைவில் இந்த சேவை அதிகரிக்கவுள்ளதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இந்த சேவையை இந்தியாவின் ரெயில்டெல் நிறுவனத்துடன் கூகுள் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கருத்தரங்கில் இந்த தகவலை சுந்தர்பிச்சை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் 23 ரெயில் நிலையங்களில் அதிவேக இலவச வை-பை சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 23 ரெயில் நிலையங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் மக்கள், இலவச வை-பை வசதியை பயன்படுத்தி வருவகின்றனர். இணையத்தை மொபைல் போன் நெட்வொர்க் மூலம் பயன்படுத்துவதை விட ரெயில் நிலையங்களில் 15 சதவீதம் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் 100 ரெயில் நிலையங்களில் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

கூகுளின் இலவச வை-பை திட்டம் தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மட்டும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply