ஹிலாரி கிளிண்டன் ஒரு சாத்தான். டொனால்ட் டிரம்ப் கடும் தாக்குதல்

ஹிலாரி கிளிண்டன் ஒரு சாத்தான். டொனால்ட் டிரம்ப் கடும் தாக்குதல்

donaldஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவாரோ இல்லையோ அவரது பிரச்சாரத்தில் அனல் பறக்கின்றது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரபரப்பாக கூறி வருவதால் அவரது கூட்டத்திற்கு பெரும் மக்கள் கூட்டம் கூடுகிறது. இந்நிலையில் இன்று அவர் பேசிய ஒரு பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாக தாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் டிரம்ப் பென்சில்வேனியா என்ற பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசியபோது, ஹிலாரி கிளிண்டனை ‘சாத்தான்’ என வர்ணித்தார். வேட்பாளர் தேர்வில் ஹிலாரி எதிராக போட்டியிட்டு கடைசி நேரத்தில் விலகிய பெர்னி காண்டர்சையும் அவர் கடுமையாக சாடினார். ‘சாத்தானுடன் அவர் உடன் படிக்கை செய்து கொண்டு போட்டியில் இருந்து விலகி அவருக்கு வழி விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் ஈராக் போரில் மரணம் அடைந்த முஸ்லிம் ராணுவ அதிகாரியின் பெற்றோர் குறித்து டிரம்ப் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். குடியரசு கட்சியின் முன்னாள் வேட்பாளர் ஜான் மெக்கேனும் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல வர்த்தகரும், கோடீசுவரருமான வாரன் பப்பெட் , டொனால்ட் மீது கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். டிரம்ப் தாக்கல் செய்த தனது வரி கணக்கை பொதுமக்களிடம் வெளியிட தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply