கடற்படையில் 486 பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கடற்படையில் 486 பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

navy
இந்திய கடற்படையில் டிராப்ட்ஸ்மேன் (கிரேடு-2) நிரப்பப்பட உள்ள 486 பணியிடங்களுக்கு இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 486

காலியிடங்கள் விவரம்:

1. மெக்கானிக்கல் – 192

2. கன்ஸ்ட்ரக்சன் – 133

3. எலக்ட்ரிக்கல் – 161

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், டிராப்ட்மேன்ஷிப் ஐடிஐ, 2 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள், மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்சன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆட்டோ கேட் படித்திருந்தால் சிறப்புத் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

வயது வரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அக்டோபர் மாதம் 24-30 காலத்தில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு குறித்த விவரங்கள் www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Flag Officer Commanding In Chief (for Civilian Recruitment Cell), Head quarters Southern Naval Command Kochi 682004)

மேலும், விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indiannavy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply