திருச்சி சிவா ராஜினாமாவா?
கடந்த சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பாவிற்கு திமுக எம்பி திருச்சி சிவாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று முன் தினம் சசிகலாவை கட்சியில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் நீக்கினார்.
இதனையடுத்து திருச்சி சிவாவையும் ராஜினாமா செய்யுமாறு திமுக தலைமை வற்புறுத்தியதாக செய்தி வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை திருச்சி சிவா மறுத்துள்ளார். ‘யாரும் என்னை ராஜினாமா செய்ய சொல்லவில்லை’ என திருச்சி சிவா கூறினாலும் திமுக வட்டாரங்களில் இந்த வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.
டெல்லி விமான நிலையத்தில் நடந்த கைகலப்புக்கு முதல்வரை திருச்சி சிவா அவதூறாக பேசியது மட்டுமின்றி வேறு சில காரணங்களும் இருப்பதாக அதிமுக, திமுக இருதரப்பு தலைமையிலும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே திமுகவும் திருச்சி சிவாவை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்தும் என்றே அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.