பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த ரூ.2,000 கோடி நிதியுதவி திடீர் ரத்து. அமெரிக்கா அதிரடி

பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த ரூ.2,000 கோடி நிதியுதவி திடீர் ரத்து. அமெரிக்கா அதிரடி

americaதீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நாடுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் இதுவரை பாகிஸ்தானுக்கு மட்டும் $14 பில்லியன் வழங்கியுள்ளது. ஆனால் இவ்வளவு நிதி அளித்தபோதிலும் பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காததால், விரைவில் வழங்க திட்டமிட்டிருந்த $300 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஆடம் ஸ்டப் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை. குறிப்பாக ஆப்கன் தலிபான் மற்றும் ஹக்கானி பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இன்னும் சான்றளிக்கவில்லை. எனவே பாகிஸ்தான் ராணுவ உதவிக்கு வழங்குவதாக இருந்த 300 மில்லியன் டாலர் நிதியுதவி ரத்து செய்யப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் உயரதிகாரி ஒருவர், “பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில், தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றது. பாகிஸ்தான் அரசு ஒருபோதும் தீவிரவாதத்தை ஊக்குவிக்காது. கூட்டணி ஆதரவு நிதி தவிர்த்து, பாகிஸ்தான்-அமெரிக்கா இடையேயான மற்ற பொதுவான விஷயங்களில் ஒத்துழைப்பு தொடர்கிறது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply