சீனாவை அடுத்து இந்தியாவிலும் மெகா பேருந்துகள்: பிரதமர் மோடி விருப்பம்

சீனாவை அடுத்து இந்தியாவிலும் மெகா பேருந்துகள்: பிரதமர் மோடி விருப்பம்

busசீனாவில் சமீபத்தில் மெகா பஸ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்து 22 மீட்டர் நீளமும் 7.8 மீட்டர் அகலமும் மற்றும் 4.8 மீட்டர் உயரமும் கொண்டது. சமீபத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் வெற்றிகரமாக இயங்கிய இந்த பேருந்து விரைவில் சீனாவின் சாலைகளை அலங்கரிக்கவுள்ளது. இந்த மெகா பஸ் சாலையில் செல்லும்போது எவ்விததடையும் இன்றி மற்ற சிறிய வாகங்கள் அதன் அடியில் உள்ள இடைவெளியில் செல்ல முடியும்

இந்த பேருந்தின் கீழ்ப்பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில் பெரிய இடைவெளி இருப்பதால் இந்த பேருந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 300 பயணிகள் அமர்ந்தும், சுமார் ஆயிரம் பேர் நின்று கொண்டும் பயணம் செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பஸ் குறித்து பிரதமர் மோடி ஆர்வமுடன் தகவல் அறிந்து கொண்டதாகவும், விரைவில் இதுபோன்ர பேருந்தை டெல்லியில் இயக்க அவர் ஆர்வமுடன் இருப்பதாகவும் டெல்லியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்த கூடுதல் தகவல்களை கேட்டறிவதுடன், இந்தியாவிலும் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த பஸ்சை இயக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளை மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply