ஜிஎஸ்டி-யால் வேலைவாய்ப்புகள் பெருகும்: வல்லுநர்கள் கருத்து

ஜிஎஸ்டி-யால் வேலைவாய்ப்புகள் பெருகும்: வல்லுநர்கள் கருத்து

gstஜிஎஸ்டி அமல்படுத்தினால் இந்தியாவில் தொழில்புரிவதற்கான சூழல் மேம்படும்; நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபடும். இதனால் அதிக வேலைவாய்ப்புகள் உரு வாகும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டீம்லீஸ் நிறுவனத்தின் நிறு வனர் ரிதுபமா சக்ரவர்த்தி இது தொடர்பாகக் கூறும்போது, “ஜிஎஸ்டி அமல்படுத்தினால் நிறுவ னங்கள் மட்டுமின்றி, பொருளாதார மும் பயன்பெறும். உள்நாட்டு நுகர்வு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு உயரும். சீரான வரி அமைப்பு காரணமாக திறந்த சந்தையாக மாறும். கன்ஸ்யூமர் குட்ஸ், எப்எம்சிஜி, மீடியா, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள், சிமென்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்பு உயரும்” என்று நம் பிக்கை தெரிவித்தார்.

ஜிஎஸ்டி அமல்படுத்திய ஒரிரு வருடங்களில் பயிற்சி மற்றும் அக்கவுன்டிங் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு உருவா கும் என குளோபல் ஹன்ட் நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் கோயல் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “உற்பத்தி, எப்எம்சிஜி, டெலிகாம், ஆட்டோ மொட்டிவ் மற்றும் ஊடக துறை களுக்கு சாதகமாக இருக்கும். தவிர இந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் பெருகும்” என்றார்.

“ஜிஎஸ்டி அமல்படுத்தப் படுவதை எதிர்பார்க்கிறோம். இதனால் தொழில் புரிவதற்கு எளிதான சூழல் மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடை யும்” என குரோனாஸ் இந்தியா நிறுவனத்தின் மனித வள பிரிவுத் தலைவர் ராஜிவ் பர்மன் தெரிவித்தார்.

இதற்கிடையே ஜிஎஸ்டி மசோதா சில திருத்தங்களுடன் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பான்மை இருக்கிறது, தவிர பெரும்பாலான கட்சிகள் இதற்கு ஆதரவாக இருப்பதால் மசோதா நிறைவேறுவதில் எந்த சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை.

Leave a Reply