பாமக அங்கீகாரம் ரத்து ஆகிறதா? சென்னை ஐகோர்ட் அதிரடியால் பரபரப்பு

பாமக அங்கீகாரம் ரத்து ஆகிறதா? சென்னை ஐகோர்ட் அதிரடியால் பரபரப்பு

courtகடந்த 2013ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைப் பெருவிழாவில், இருசமூகத்தினருக்கு இடையே எழுந்த மோதல் குறித்து பா.ம.கவிற்கு எதிராக தொடரந்த வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல் மற்றும் மகாதேவன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ‘மோசடி செய்து பா.ம.க அங்கீகாரம் பெற்றது தெரியவந்தால், தேர்தல் கமிஷன் பா.ம.க அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்த நடவடிக்கையை எடுக்கலாம் என்று’ தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பின் நகல் வந்ததும் தேர்தல் கமிஷன் பாமகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமா? என அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடத்தக் கூடாது’ என வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் “மாமல்லபுரத்தில் ஒவ்வொரு முறை சித்திரைப் பெருவிழா நடக்கும் போதும், கலவரம் ஏற்படும். ‘2013 ம் ஆண்டு கலவரம் எற்படும்’ என்று தடைகோரி, வழக்கு தொடர்ந்தேன். அதை மீறி காவல்துறை அனுமதி கொடுத்ததால், ஒரு பெரிய கலவரத்தை தமிழகம் சந்திக்க நேரிட்டது. பேசிய ஆடியோ மற்றும் வீடியோக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த ஐகோர்ட், ‘கட்சி தொடங்கும் போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, கொடுத்த வாக்குறுதிகளை மீறி கட்சி செயல்பட்டால் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.” என்று நீதிபதிகள் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து வாராகியின் வழக்கறிஞர் விஜேந்திரன் கூறியதாவது, “பா.ம.கவினர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்து கொண்டதாக வழக்கில் சொல்லியிருந்தோம். வழக்கு நேற்று (08.08.16) விசாரணைக்கு வந்தது. 2002 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஸ்டேட் ஆஃப் வெல்பர் அசோசியேஷன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், ‘தேர்தல் கமிஷனுக்கு, ஒரு அரசியல் கட்சியின் அங்கீகாரத்தையோ, பதிவையோ ரத்து செய்வதற்கு அதிகாரம் இல்லை. ஆனாலும் ஒரு அரசியல் கட்சி தனது கொள்கை அறிக்கைக்கு எதிராக செயல்பட்டால் மோசடி செய்து அனுமதி பெற்றதாக கருதப்படும். அந்த நிலையில் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்.’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை சுட்டிக் காட்டினோம். எனவே கட்சியை தொடங்கும்போது அளித்த கொள்கை அறிக்கைக்கு மாறாக பாமக நடந்துகொண்டது தெரியவந்தால், தேர்தல் கமிஷனே பா.ம.க மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல் மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய டிவிஷனல் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.

ஐகோர்ட் உத்தரவை தொடரந்து பாமக அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply