அண்ணாமலைப் பல்கலை.யில் தகுதித் தேர்வு பயிற்சி வகுப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொருளியல் துறையில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (SETNET) பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
பல்கலைக்கழக துணை வேந்தர் செ.மணியன் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசினார். பொருளியல் துறைத் தலைவர் ஜி.ரவி வாழ்த்துரையாற்றினார். முன்னாள் துறைத் தலைவர் என்.ராமகோபால், பேராசிரியர் இ.செல்வராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொறுப்பாளர் கே.கோட்டைவீரன் நன்றி கூறினார்.