ரயிலில் கொள்ளையடிக்கப்பட்டது செல்லாத பணமா? திடுக்கிடும் திருப்பம்

ரயிலில் கொள்ளையடிக்கப்பட்டது செல்லாத பணமா? திடுக்கிடும் திருப்பம்

trainசேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை ரயிலின் மேற்கூரையில் துளைபோட்டு நேற்று கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தற்போது ரயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொள்ளையடிக்க பணம் செல்லாத பணம்தான் என்று ஒருசில செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் தரப்பில் இருந்து இது உறுதி செய்யப்படவில்லை. பழைய நோட்டுக்கள்தான் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், செல்லாத பணத்தை கொள்ளையர்கள் ஏன் கொள்ளையடிக்க போகின்றார்கள் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

இதுகுறித்து ரயில்வே போலீஸார்கள் கூறியபோது, “பணம் பயணிக்கிற கோச், பணம் எவ்வளவு.. என்கிற அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே கொள்ளையர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் ஒடும் ரயிலின் கூரையில் துளையிட முடியாது என்பதை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் முன்பே துளையிட்டுவிட்டு பின்னர் வெறுமனே மூடி வைத்ததை எங்கோ ஒரு இடத்தில் ரயில் நிற்கும்போது, அப்புறப்படுத்தி உள்ளே இறங்கி பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள் என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது. போலீசாருக்கு மேலும் பல க்ளுக்கள் தெரிந்துள்ளதாகவும், விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply