தற்கொலை செய்து கொண்ட முன்னாள் முதலமைச்சரின் கையேட்டில் இருந்தது என்ன? பரபரப்பு தகவல்

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் முதலமைச்சரின் கையேட்டில் இருந்தது என்ன? பரபரப்பு தகவல்

4நீதிமன்ற உத்தரவு காரணமாக முதல்வர் பதவியை இழந்த அருணாச்சலபிரதேச மாநில முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் சமீபத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்கொலைக்கு முன்னர் அவர் நான்கு லட்டர்களை எழுதி வைத்துள்ளதாகவும், அந்த லட்டர் தற்போது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இதுகுறித்து கலிக்கோவின் மரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி டாலோ போடோம் கூறிய்போது, “4 கையேடுகள்அவர் இறப்பதற்கு முன்பு எழுதியவை, அவற்றை நாங்கள் படித்துப் பார்க்கவில்லை. எனினும், அது தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதமாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். அவர் தங்கியிருந்த அறையில், அவரது நாட்குறிப்பு கிடைக்கப்பெறவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

தலா 60 பக்கங்களைக் கொண்ட 4 கையேடுகளில் ‘மேரே விசார்’ (எனது சிந்தனைகள்) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், கலிக்கோ கையெழுத்திட்டுள்ளார். அதனை சீல் வைத்து மூடி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply