பிரதமர் சுதந்திர தின உரையின்போது அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கியது ஏன்?

பிரதமர் சுதந்திர தின உரையின்போது அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கியது ஏன்?

kejriwal-asleep_650x400_81471239633பிரதமர் நரேந்திரமோடி நேற்று 70வது சுதந்திர தின உரையை ஆற்றிக்கொண்டிருக்கும்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கியதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர்களையும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிரதமரின் பேச்சு சலிப்பானதாக இருந்ததால் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தூங்கியிருக்கக் கூடும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். இது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து மணீஷ் சிசோடியா தனது வாட்ஸ் அப்பில் கூறியிருப்பது: பிரதமர் மோடியின் உரை பெரும் சலிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. அதனால் ஒருவேளை அரவிந்த் கெஜ்ரிவால் கண்கள் அசந்து தூங்கியிருக்கக் கூடும். அந்த அளவுக்கு மோடியின் பேச்சு பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை.

காஷ்மீர் பிரச்னை, தலித்துகள் மீதான தாக்குதல், விவசாயிகள் தற்கொலை, புதிய கல்விக் கொள்கை, கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவது, நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக மோடி தனது உரையில் எதையும் குறிப்பிட்டு பேவில்லை. மாறாக, வெறும் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் அவரது உரை இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் டெல்லி கலாசாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியபோது, ஒலிம்பிக்கில் “மிகவும் சலிப்பான பேச்சு’ என்னும் போட்டி வைத்தால் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தங்கப் பதக்கம் பெறும் என குறிப்பிட்டார்.

Leave a Reply