சிறையில் இடமில்லாததால் 38,000 கைதிகளை விடுதலை செய்கிறது துருக்கி

சிறையில் இடமில்லாததால் 38,000 கைதிகளை விடுதலை செய்கிறது துருக்கி

Turkey coup attemptசமீபத்தில் துருக்கி நாட்டில் ராணுவ புரட்சி செய்ய முயற்சி செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிறையில் இடவசதி இல்லாததால் அவர்களில் 38,000 பேர்களை விடுதலை செய்ய துருக்கி அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சட்டத் துறை அமைச்சர் பக்கீர் போஸ்டக் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:

துருக்கி அரசு புதிய ஆணை ஒன்றின் மூலம் 38,000 கைதிகளை விடுதலை செய்யவுள்ளது. ஆயினும் இந்த நடவடிக்கையை பொதுமன்னிப்பாகக் கருத முடியாது. இது நிபந்தனையுடன் கூடிய விடுதலையே ஆகும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் துருக்கியில் அதிபர் எர்டோகன் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் முயற்சி செய்தனர். ஆனால் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தின் ஒரு பிரிவு மூலம் இந்த புரட்சி அடக்கப்பட்டு புரட்சிக்கு காரணமான ஆயிரக்கணக்கானோர் பதவியை பறித்ததுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராணுவத்தினர், காவல்துறையினர், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 17,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இவர்களை சிறையில் அடைப்பதற்காக, சிறையில் இட வசதி ஏற்படுத்துவதற்காகவே பிற குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கைதிகளை விடுவிக்கும் அரசாணை தவிர, மேலும் 2,300 காவல்துறையினர், 136 ராணுவ அதிகாரிகள், 196 தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அரசாணையும் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply