இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய மல்யுத்த வீராங்கனை.
கடந்த 5ஆம் தேதி ஆரம்பமான ரியோ ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்து 13 நாட்கள் ஆகியும் இந்தியாவுக்கு ஒரு வெண்கல பதக்கம் கூட கிடைக்காத நிலையில் இந்தியாவின் மானத்தை மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் காப்பாற்றினார். அவர் 50கிலோ எடை மல்யுத்த பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றார். கிர்கிஸ்தான் வீராங்கனையுடன் ஆக்ரோஷமாக மோதிய அவருக்கு 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த சாக்ஷி மாலிக் காலிறுதியில் ரஷ்ய வீராங்கனையுடன் தோல்வி அடைந்தாலும், பின்னர் ரெபிசாஜ் சுற்றில் மங்கோலிய வீராங்கனையை தோற்கடித்து வெங்கலப்பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்த வெண்கலப்பதக்கத்தின் மூலம் பதக்கங்கள் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இருப்பினும் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.