இன்றைய ராசிபலன் 19/08/2016

இன்றைய ராசிபலன் 19/08/2016

astrologyமேஷம்
சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் ரிஷபம்
யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப வழி நடத்துவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்ள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

ராசி குணங்கள் மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பர். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

ராசி குணங்கள் கடகம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்

ராசி குணங்கள் சிம்மம்
தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்

ராசி குணங்கள் கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் துலாம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே

ராசி குணங்கள் விருச்சிகம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள் தனுசு
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் மகரம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள் கும்பம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள் மீனம்
எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். அரசு விவாரகங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

Leave a Reply