அஜித்துக்கு புதிய பட்டம் கொடுத்த ஆஸ்திரியா செய்தி நிறுவனம்
அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற நிலையில் தற்போது ஆஸ்திரியா Carinthia என்ற பகுதியில் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பு ஹெலிகாப்டரில் கேமிரா கோணம் வைத்து அதிரடி ஆக்சன் காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து ஆஸ்திரியா நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று தலைப்பு செய்திகளில் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் அஜித் என்றும் அவருடைய படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியாவில் நடைபெற்றுவ் அருவதாகவும் அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அஜித்துக்கு ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ என்ற பட்டத்தையும் அந்த செய்தி நிறுவனம் அளித்துள்ளது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை சில நடிகர்கள் இங்கு விலைகொடுத்து வாங்க முயற்சித்து வரும் நிலையில் ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ என்ற பட்டம் அஜித்தை தேடி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் 20% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.