திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் குறித்த வழக்கு. அவசர வழக்காக எடுக்க முடியாது. சென்னை ஐகோர்ட்

திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் குறித்த வழக்கு. அவசர வழக்காக எடுக்க முடியாது. சென்னை ஐகோர்ட்

highcourtதமிழக சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 17-இல் தேதி சட்டப் பேரவையில் அதிமுக எம்எல்ஏ நமக்கு நாமே பயண திட்டத்திற்கு எதிராகப் பேசியது தொடர்பாக, நான் (ஸ்டாலின்) அளித்த பதில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இதேபோல், அதிமுக உறுப்பினரின் கருத்தும் நீக்கப்பட வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் கேட்டபோது, திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பேரவைக்கு வராத, கையெழுத்திடாத உறுப்பினர்கள்கூட இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது ஜனநாயக விரோதமானது. பேரவையில் முக்கிய மசோதாக்களை திமுக எதிர்க்கக்கூடாது என்பதற்காவே இந்த இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு முரணானது.

இதனால் மக்களின் பிரதிநிதிகள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பேரவைத் தலைவரின் உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதுடன் தன்னிச்சையானதும் ஆகும்.எனவே, உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய அதிகாரம் அளிக்கும் தமிழக சட்டப்பேரவை விதி 121 செல்லாது எனவும் அந்த விதி இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 194-க்கு எதிரானது எனவும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது மனுவில் கூறீருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு மூத்த வழக்குரைஞர் மோகன் பராசரன் முறையீட்டார். இதையடுத்து, “வழக்கை முறையாக தாக்கல் செய்யுங்கள். மற்ற வழக்குகளுடன் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு ஏற்க முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

Leave a Reply