செவ்வாய்க்கு விமானம்
செவ்வாய்க்கு விமானம்
2030-ம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தானியங்கி விமானத்தை வடிவமைத்து அதன் சோதனை முயற்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தானியங்கி பேருந்து
பிரான்ஸைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தானியங்கி பேருந்தை செயல்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. பின்லாந்தின் எஸ்போ நகருக்கும் டாம்பர் நகருக்கும் இடையே சோதனை நடந்து வருகிறது. மணிக்கு 25 மைல் வேகத்தில் இந்த பேருந்து செல்கிறது.
ஸ்மார்ட் டாட்டூஸ்
மின்னணு சர்க்யூட்களை டாட்டூஸ் போல உருவாக்கியுள்ளனர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள். மைக்ரோசாப்ட் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இதன் பெயர் டியோ ஸ்கின். இதன் மூலம் ஸ்மார்ட்போன் / கனிணியையும் இயக்கலாம்