ஐ.நா. பொதுச்சபையின் புதிய தலைவர் இந்தியா வருகை

ஐ.நா. பொதுச்சபையின் புதிய தலைவர் இந்தியா வருகை

peterஐக்கிய நாட்டு பொது சபைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பீட்டர் தாம்ஸன் அவர்கள் பதவியேற்கும் முன் தனது முதல் பயணமாக வரும் வரும் திங்கள் அன்று அதாவது ஆகஸ்ட் 29 அன்று இந்தியா வருகிறார். இந்திய சுற்றுப்பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர்களை நேரில் சந்தித்து, ஐ.நா.வின் “நீடித்த முன்னேற்ற இலக்குகள்’ திட்டம் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஐ.நா.வுக்கான ஃபிஜி நாட்டுத் தூதராகப் பொறுப்பு வகித்து வரும் பீட்டர் தாம்சன், செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி அன்று ஐ.நா. பொது சபைத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். பொறுப்பேற்கும் முன்பு இந்தியா மற்றும் சீனாவுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பீட்டர் தாம்ஸன் கூறியதாவது: ஆசிய பசிபிக் மண்டலத்தின் ஃபிஜி நாட்டைச் சேர்ந்த நான், அதே மண்டலத்தின் மிகப் பெரிய இரு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply