இன்றைய ராசிபலன் 30/08/2016
மேஷம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி ஒத்துழைப்பார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள் ரிஷபம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி குணங்கள் மிதுனம்
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ராசி குணங்கள் கடகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். லேசாக தலை வலிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ராசி குணங்கள் சிம்மம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்
ராசி குணங்கள் கன்னி
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள் துலாம்
நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ராசி குணங்கள் விருச்சிகம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்-. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி குணங்கள் தனுசு
சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பழைய பகை, கடன் நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள் மகரம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
ராசி குணங்கள் கும்பம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ராசி குணங்கள் மீனம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெ டுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள. உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு