நயன்தாரா அதிமுகவில் சேர்ந்துவிட்டாரா? ஊடகங்களின் வதந்திகள்
நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே வரமாட்டார். இந்நிலையில் அவர் அதிமுகவை நோக்கி நெருங்கி வருவதாகவும், விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் குஷ்புவுக்கு எதிராக அவர் பிரச்சாரத்தில் களமிறங்குவார் என்றும் ஒருசில ஊடகங்கள் வதந்தியை கிளப்பி வருகின்றன.
உண்மையில் என்ன நடந்தது என்றால் நேற்று முன் தினம் மெட்ராஸ் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற ‘அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்’ நடத்திய விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். விஸ்வநாதன் ஆனந்த், பி.டி.உஷா, வாசுதேவ் பாஸ்கரன், ஸ்ரீகாந்த் உள்பட பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நயன்தாராவும் கலந்து கொண்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
அம்மா பெயரில் உள்ள பவுண்டேஷனில் நயன்தாரா கலந்து கொண்டதால் உடனே அவர் அதிமுகவில் இணணயவுள்ளதாக ஒருசிலர் ஃபேஸ்புக்கில் கதை கட்டிவிட்டனர். இதனை அடிப்படையாக வைத்து ஒருசில ஊடகங்களும் பரபரப்பை ஏற்படுத்த செய்தி வெளியிட்டு வருகின்றன.
நிஜத்தில் நயன்தாராவுக்கு அரசியலில் சிறிதும் ஆர்வம் இல்லை என்றும் தென்னிந்திய மொழிகளில் இன்னும் அவர் பிசியாக இருப்பதால் அவர் நடிப்பை தவிர வேறு எந்த துறையிலும் கால்பதிக்க வாய்ப்பில்லை என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.