தூக்கத்தின் அருமை சொல்லும் வீடியோ
தூக்கம் மிகவும் அவசியமானது. தூக்கம்தான் நமக்குப் பல நலன்களையும் அளிக்கிறது. தூக்கத்தின் முக்கியத்துவத்தையும், தூக்கத்தால் ஏற்படும் பலன்களையும், டெட் அமைப்பின், ‘பெனிபிட்ஸ் ஆஃப் குட்நைட் ஸ்லீப்’ வீடியோ அழகாக விளக்குகிறது.
சரியான நேரத்தில் தூங்கச் செல்வது முக்கியம் எனத் தொடங்கும் இந்த வீடியோ, தூக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. நம்மில் பலர் தூக்கம் பற்றி சரியாக அறிந்திருப்பதில்லை எனக் குறிப்பிடுப்பட்டிருப்பதோடு, தூக்கம் என்பது இழக்கப்படும் நேரம் அல்ல என்றும், அது மிகவும் முக்கியமான செயல்பாடு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தூக்கத்தின் முக்கியத்துவத்தை அறிய: https://youtu.be/gedoSfZvBgE