ஆபாச சிடி எதிரொலி. டெல்லி அமைச்சர் பதவி நீக்கம். அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

ஆபாச சிடி எதிரொலி. டெல்லி அமைச்சர் பதவி நீக்கம். அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

aravind kejriwalடெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஏற்கனவே பனிப்போர் நிலவி வரும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர் ஒருவர் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக அரவிந்த கெஜ்ரிவால் வேறு வழியின்றி அமைச்சரை நீக்கியுள்ளார்.

அரவிந்த கெஜ்ரிவால் அமைச்சரவையில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் சந்தீப்குமார். இவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவரும் கூட. இந்நிலையில் நேற்று மாலை திடீரென சந்தீப்குமார் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி டெல்லி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

எனவே மத்திய அரசு ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுக்கும் முன், அரவிந்த் கெஜ்ரிவாலே அமைச்சர் சந்தீப்குமாரை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இதனை அவர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply