லண்டன் பத்திரிகை மீது ரூ.1150 கோடி நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்த டொனால்ட் டிரம்ப் மனைவி

லண்டன் பத்திரிகை மீது ரூ.1150 கோடி நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்த டொனால்ட் டிரம்ப் மனைவி

6அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பின் மனைவியை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று விபச்சார அழகி என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனால் இந்த பத்திரிகை மீது ரூ.1150 கோடி நஷ்ட ஈடு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் மனைவி மெலானியா ஒரு முன்னாள் மாடல் அழகி. நியூயார்க்கில் ஒரு தனியார் நிறுவனத்தில் பகுதி நேர பாதுகாவலராக பணிபுரிந்த இவர் டிரம்பை சந்தித்து காதல் கொண்டார். டொனால்டு டிரம்பை திருமணம் செய்யும் முன்பு நியூயார்கில் விபசார தொழில் செய்து வந்ததாகவும், 1995-ம் ஆண்டு பத்திரிகைகளுக்கு நிர்வாண போட்டோ எடுக்க போஸ் கொடுத்துள்ளதாகவும் லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மெலானியா டிரம்ப் அந்த பத்திரிகை மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அந்த செய்தி 100 சதவீதம் அப்பட்டமான பொய்யானது. எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அது பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பத்திரிகை எனக்கு ரூ.1150 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply