மரணம் அடைந்ததாக கூறப்பட்ட ஜிம்பாவே அதிபர் நலமுடன் நாடு திரும்பினார்.
ஜிம்பாவே நாட்டின் அதிபர் ராபர்ட் முகாபே மரணப்படுக்கையில் இருப்பதாகவும் இறந்துவிட்டதாகவும் கடந்த சில நாட்களாக வதந்திகள் எழும்பிய நிலையில் இன்று அவர் உடல் ஆரோக்கியத்துடன் நாடு திரும்பினார்.
92 வயதான ஜிம்பாவே அதிபர் ராபர்ட் முகாபே சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக துபாய் சென்றார்.
துபாயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி மரணப் படுக்கையில் கிடப்பதாக வதந்தி கிளம்பியது. அரசு தரப்பில் இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட வேளையிலும், ஜிம்பாப்வே மக்கள் சமாதானம் அடையவில்லை.
இந்நிலையில், பாதுகாவலர்கள் துணையுடன் வெளிநாட்டில் இருந்து ராபர்ட் முகாபே இன்று விமானம் மூலம் ஹராரே நகரை வந்தடைந்ததாகவும், வழக்கம்போல் அவர் கலகலப்பாக காணப்பட்டதாகவும் ஜிம்பாப்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.