ப்ளூடூத், எஃப்.எம் வசதியுடன் புதிய ‘மேஜர்’ ஸ்பீக்கர்

ப்ளூடூத், எஃப்.எம் வசதியுடன் புதிய ‘மேஜர்’ ஸ்பீக்கர்

speaker_3000949fஜீப்ரானிக்ஸ் நிறுவனம் “மேஜர்” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய டவர் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மைக், ப்ளூடூத் இணைப்பு மற்றும் USB/SD ஸ்லாட்டுகள் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப பொருட்கள், ஒலி/ஒளி மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்திவரும் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், தற்போது ‘மேஜர்’ என்ற பெயரில் புதிய டவர் பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மர அலமாரியின் உள்ளே இருக்கும் இந்த ஸ்பீக்கர்கள் பளபளப்பான முன்புறத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. . ஒவ்வொரு டவர் ஸ்பீக்கரும், குறைந்த அலைவரிசை ஒலிகளை வழங்கும் 16 செ.மீ ஒலிபெருக்கியை கொண்டுள்ளது. 70 வாட்டுகள் RMS ஒலி அளவுடன், சத்தத்தின் முழு வீச்சையும் உணர முடியும் என ஜீப்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் கரோக்கே வசதிக்கு ஏற்ற வயர்கள் அற்ற மைக்குகளும் இதில் உள்ளன.

தொலைக்காட்சி, DVD ப்ளேயர், கம்ப்யூட்டர் போன்றவற்றை இந்த ஸ்பீக்கர்களுடன் இணைக்க ஏதுவாக AUX அம்சம் இருக்கிறது. இதில் FM வானொலி கேட்க விரும்புவர்களுக்காக, FM வானொலியும் இருக்கிறது.

ஜீப்ரானிக்ஸின் ஒரு வருட உத்திரவாதத்துடன் விற்கப்படும் இதன் விலை ரூ. 8787.

Leave a Reply