‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் கைவிட்டது ஏன்?

‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் கைவிட்டது ஏன்?

4அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது பல பிரபலங்களின் கனவாக இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்பட பலர் இந்த முயற்சியில் இறங்கியிருந்த போதிலும், இதுவரை கைகூடி வரவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் நடிப்பில் மணிரத்னம் இந்த படத்தை இயக்க முடிவு செய்தார். ஆனால் ஒருசில காரணங்களால் இந்த முயற்சி தடைபட்டது. இதுகுறித்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கூறியதாவது:

“மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வனை ஒரு சினிமாவாக எடுக்கும் திட்டம் ஆறாண்டுகளுக்கு முன்பு உருவானது. நான் அதற்குத் திரைக்கதை எழுதினேன். ஆனால் தமிழகத்தின் எந்தக்கோயிலிலும் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. கோயில்களின் சுற்றுச்சுவர்கள் அல்லாமல் தமிழகத்தில் தரைத்தளத்தில் அமைந்த பெரிய கோட்டைகள் இல்லை. வரைகலை இன்றைய வளர்ச்சி அடையாத அன்றைய சூழலில் செட் போட்டு எடுப்பதென்றால் ஐம்பதுகோடி வரை செலவாகுமென கணக்கிடப்பட்டது. ஆகவே திட்டம் கைவிடப்பட்டது.

அந்தத் திரைக்கதையை நான் கோதாவரியின் கரையில் பிரம்மாவரம் அருகே இருந்த எலமஞ்சலி லங்கா என்னும் ஊரில் ஒரு விருந்தினர் மாளிகையில் ஒருமாதகாலம் தங்கி எழுதினேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மணிரத்னம் தற்போது கார்த்தி, அதிதிராவ் நடிப்பில் ‘காற்று வெளியிடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ முயற்சியை தொடங்குவாரா/ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply