டெல்லி: முதல்வருக்கு எதிராக வளையல்களை அசைத்து முற்றுகையிட்ட பாஜக மகளிர் அணியினர்
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் இன்று காலை ரயில் பயணம் செய்ய டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தபோது, திடீரென பாஜக மகளிர் அணியினர் அவருக்கு எதிராக முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி டெல்லி முதல்வரை நோக்கி முன்னேறிய மகளிரணியினர், அவரை நோக்கி வளையல்களை அசைத்தபடி எதிர்ப்பு கோஷமிட்டனர்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் தவறான நடத்தைகள் குறித்து கெஜ்ரிவால் மவுனம் காப்பதாகவும், உடனடியாக அவர் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சந்தீப் குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஷுடோசை உடனே பதவி நீக்கம் வேண்டும் என்றும் பாஜக மகளிரணியினர் வலியுறுத்தினர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பா.ஜ.க. மகளிரணியினர் கெஜ்ரிவாலிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இதனை பா.ஜ.க. மறுத்துள்ளது.