சாம்சங் கேலக்சி நோட் 7 போனுக்கு ஆஸ்திரேலிய விமான நிறுவனம் திடீர் தடை

சாம்சங் கேலக்சி நோட் 7 போனுக்கு ஆஸ்திரேலிய விமான நிறுவனம் திடீர் தடை

18சமீபத்தில் வெளியான சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் பொதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் நல்ல விற்பனை ஆனது. ஆனால் அதை பயன்படுத்திய பலர் சார்ஜ் செய்யும்போது வெடிக்கும் அனுபவத்தை உணர்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்சங் நிறுவனம் உடனடியாக விற்பனைக்கு சென்ற 2.5 மில்லியன் போன்களை திரும்பப்பெற்றது. விற்பனையையும் நிறுத்தியது. ஆஸ்திரேலியாவில் மட்டுமே சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களும் திரும்பப் பெறப்பட்டன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் இரண்டு முன்னணி விமான நிறுவனங்களான குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை ஆன் செய்வது மற்றும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் விமானத்தில் அந்த குறிப்பிட்ட ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. எனவே இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

Leave a Reply