சத்யராஜூக்கு ஜோடி அமலாபால்? அதிர்ச்சியில் கோலிவுட்
‘மைனா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த அமலாபால், அதன்பின்னர் விஜய் உள்பட முன்னணி இளம் நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வெற்றி நாயகியாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்தார்.
சமீபத்தில் அவர் கணவர் விஜய்யை விவாகரத்து செய்ய முடிவு செய்தார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் இளம் நடிகர்களுக்கு மட்டுமே ஜோடியாக நடித்து வந்த அமலாபால் தற்போது சீனியர் நடிகரான சத்யராஜூக்கு ஜோடியாக ‘முருகவேல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படம் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘லைலா ஓ லைலா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சத்யராஜ் இரு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் கஞ்சா கருப்பு ஆட்டோ டிரைவர் வேடத்தில் காமெடி செய்துள்ளார். ஜோஷியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.