கேரள அவியல் செய்வது எப்படி?

கேரள அவியல் செய்வது எப்படி?

13என்னென்ன தேவை?

கத்தரிக்காய், முருங்கைக்காய் , வாழைக்காய், அவரைக்காய், கேரட், சேனை, வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, மாங்காய் = அரை கிலோ

(காய்கறிகள் அவரவர் விருப்பப்படி கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம்.)

அரைக்க வேண்டியவை?

தேங்காய் – அரை மூடி

பச்சை மிளகாய் – 5

சின்ன வெங்காயம் – 4

பூண்டு – 2 பல்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காய்கறிகளை மெலிதாக நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளவும். சேனையைத் தனியே வேகவைத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சிறிது கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பெரிய கடாயில் காய் கறிகளைப் போட்டு, மஞ்சள் தூள், உப்பு, தேவையான நீர் விட்டு மூடி வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்தவுடன் சேனையைச் சேர்க்கவும். அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விடவும். காய்கறிகள் தேங்காய் கலவையுடன் நன்கு சேர்ந்து வரும்போது, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை மேலாக ஊற்றவும். (விருப்பப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டலாம். மாங்காய் சேர்ப்பதால் தயிர் தேவையில்லை.)

Leave a Reply