ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரம் திடீர் ரத்து. காரணம் என்ன?

ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரம் திடீர் ரத்து. காரணம் என்ன?

hilariஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் திடீரென நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகUS Election 2016, hilari clinton, donald truimp, obama உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது தேர்தல் பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஹிலாரியின் மருத்துவர் லிசா பர்டாக் கூறும்போது, “ஹிலாரி நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் வருகின்ற செவ்வாய், புதன்கிழமைகளில் கலிபோர்னியாவில் நடக்கவிருந்த நிதி திரட்டும் பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஹிலாரியின் உடல் நிலை சீராகவுள்ளது” என்று கூறினார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ‘செப்டம்பர் 11’ இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஹிலாரி உடல் நலக்குறைவால் இடையிலேயே வெளியேறினார். இதனையடுத்தே ஹிலாரி கிளிண்டன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply