தண்ணீரை நிறுத்திவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா திட்டமா?

தண்ணீரை நிறுத்திவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா திட்டமா?

siddhaaஒவ்வொரு முறையும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது தான் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இதற்கு முன்னர் பங்காரப்பா, கடந்த 1991ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோதும் இதேபோல் தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு கெட்ட பெயர்கள் பெற்றுள்ள சித்தராமையாவின் அரசு காவிரி பிரச்சனையை கையில் எடுத்து மக்களிடம் அனுதாபம் பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் தமிழகத்திற்கு தண்ணீரை நிறுத்திவிட்டு முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

ஏற்கனவே 3 வருடங்கள் ஆட்சி செய்துவிட்ட சித்தராமையா மக்கள் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு, ராஜினாமா செய்தால் அனுதாப ஓட்டுக்கள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply