ஃபேஸ்புக்கில் லைக் வாங்க தீயுடன் தண்ணீரில் குதித்த வாலிபர்
சமூக வலைத்தளங்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஃபேஸ்புக்கில் லைக்குகள் வாங்க உயரை பணயம் வைத்து பலர் சாகச காட்சிகள் செய்து வரும் நிலையில் ரஷ்யாவில் உள்ள இளைஞர்கள் குழு ஒன்று உடல் முழுவதும் தீயை பற்ற வைத்து தண்ணீரில் குதித்த சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவித முன்னேச்சரிக்கையும் பயிற்சியும் இல்லாமல் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்து தண்ணீரில் குதித்த இளைஞனையும் அவரை ஊக்குவித்தவர்களையும் ரஷ்ய போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் ஃபேஸ்புக்கில் இந்த புகைப்படங்களுக்கும் வீடியோவிற்கும் ஏராளமான லைக்குகள் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது