எட்வர்ட் ஸ்னோடென் பொது மன்னிப்பு கோரிக்கை நிராகரிப்பு. வெள்ளை மாளிகை அதிரடி
அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் பணியாளரான எட்வர்ட் ஸ்னோடென், அந்நிறுவனத்தின் பல்வேறு ஆவணங்களை வெளியிட்டதால் அமெரிக்க அரசால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்ட்களாக எட்வர்ட் ரஷ்யாவில் தங்கியியுள்ளார். இருப்பினும் அவர் அங்கு தங்கியிருக்க அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய இருப்பதால் தனக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து கருத்து கூறிய வெள்ளி மாளிகையில் செய்தித்துறை செயலர் ஜோஷ் ஏர்னஸ்ட் “உண்மையான தகவல் தாங்கிகள் தேசத்தின் பாதுகாப்புக்கு எந்த பங்கமும் விளைவிக்காமல் நன்கு திட்டமிடப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சில தகவல்களை வெளி உலகுக்கு தெரிவிப்பார்கள். ஆனால் எட்வர்ட் ஸ்னோடென் அப்படி செய்யவில்லை. மாறாக அமெரிக்க பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
அவருடைய நடத்தை அமெரிக்கர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் ஸ்னோடென் அமெரிக்காவுக்கு திரும்பி அவர் மீதான குற்றச்சாட்டுகளை சட்டபூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.
அமெரிக்க நீதித்துறைக்கு உட்பட்டு ஒரு கிரிமினில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு என்ன உரிமைகள் பொருந்துமோ அத்தனையும் ஸ்னோடெனுக்கு வழங்கப்படும்” என்று கூறினார்.
அமெரிக்காவுக்கு எட்வர்ட் திரும்பி சென்றால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.