ராம்குமார் மரணம். சிறையில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்

ராம்குமார் மரணம். சிறையில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்

Ramkumar-Puzhalprisonlongநுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் திடீரென நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது சிறை அதிகாரிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறையில் நடந்தது என்ன? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

சிறைத்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறியபோது, “”ராம்குமார், விசாரணை கைதி எண் 2ல் டிஸ்பென்சரி பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் வெங்கடேசன், இளங்கோ ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர். ராம்குமார், ஏற்கனவே தற்கொலை முயன்றதால் அவருக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் தண்ணீர் குடிப்பதாக சென்ற ராம்குமார், அங்குள்ள சுவிட்ச்பாக்ஸை வாயால் கடித்து உடைத்து அதில் உள்ள மின்கம்பியை கடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியவுடன் அலறியுள்ளார். இதைக்கேட்டு சக கைதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சமயத்தில் சிறைக்காவலர் பேச்சிமுத்து அங்கு வந்துள்ளார். ராம்குமாரை மின்சாரம் தாக்கியதையறிந்த அவர், கையில் இருந்த லத்தியால் அவரை தாக்கினார். இதன்பிறகு அவர் கீழே விழுந்துள்ளார். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக வாக்கி டாக்கியில் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். சிறை மருத்துவமனை டாக்டர் நவீன், ராம்குமாரை பரிசோதித்து அவருக்கு முதலுதவியை அளித்தார். இதையடுத்து அங்கிருந்து சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது அவர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார். ராயபேட்டை அரசு மருத்துவமனை டாக்டர், சையது அப்துல்காதர், ராம்குமாரை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த டிஸ்பென்சரி பிளாக்கில் உள்ள சுவிட்ச் பாக்ஸ் கடந்த சில தினங்களாக பழுதடைந்து காணப்பட்டுள்ளது. அதை சரி செய்ய சிறையில் உள்ள எலெக்ட்ரீசனிடம் சொல்லியும் அவர் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 அடி உயரத்தில் உள்ள அந்த சுவிட்ச் பாக்ஸ் பழுதடைந்து இருந்ததால் அதை எளிதில் ராம்குமார் உடைத்துள்ளார். மேலும் அந்த பிளாக்கில் உள்ள சி.சி.டி.வி கேமராவும் பழுதடைந்துள்ளதாம். இதனால் ராம்குமார், தற்கொலை நிகழ்வு அதில் பதிவாகவில்லை” என்று கூறினார்.

ஆனால் சுவிட்ச் பாக்ஸ் பழுது, சிசிடிவியும் பழுது என்று சிறை அதிகாரிகள் கூறுவது நம்பும்படியாக இல்லை என்றும் பத்து அடி உயரமுள்ள சுவிட்ச் பாக்ஸில் உள்ள வயரை ராம்குமார் எப்படி கடித்திருக்க முடியும் என்றும் டுவிட்டரில் பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்ம்

Leave a Reply