30 வயதில் திருமணம் செய்து கொள். இளம் நடிகருக்கு இளையதளபதியின் ஆலோசனை

30 வயதில் திருமணம் செய்து கொள். இளம் நடிகருக்கு இளையதளபதியின் ஆலோசனை

3இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ஒரு முக்கிய பாடலின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த பாடலில் விஜய்யுடன் இணைந்து ‘பாபநாசம்’ படத்தில் நடித்த இளம் நடிகர் ரோஷன் பஷீர் நடனம் ஆடவுள்ளார். இந்த பாடலை மிக பிரமாண்டமாக படமாக்க இயக்குனர் பரதன் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யை ரோஷன் பஷீர் சந்தித்தபோது அவரிடம் பல விஷயங்கள் பேசியதாகவும் அப்போது தன்னிடம் வயதை கேட்டதாகவும் தான் அதற்கு 23 என்று கூறியதாகவும் கூறினார்.

அப்போது விஜய் தன்னிடம் 30 வயதில் திருமணம் செய்து கொள். அதுதான் திருமணத்திற்கான சரியான வயது என்று ஆலோசனை கூறியதாகவும் ரோஷன் பஷீர் கூறியுள்ளார்.,

Leave a Reply