சீனாவில் தொடர்கதையாகும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள். இதுவரை 199 பேர் பலி

சீனாவில் தொடர்கதையாகும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள். இதுவரை 199 பேர் பலி

11சீனாவில் அடிக்கடி ரசாயன தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு அதனால் அப்பாவி ஊழியர்கள் பலியாகி வருவது வாடிக்கையாகி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் அந்நாட்டில்
சுமார் 232 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்துகளால் 199 பேர் மரணமடைந்துள்ளதாகவும் புள்ளி விபர அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்துக்களால் 400-க்கும் அதிகமான பேர் காயமடைந்துள்ளனர்.

இரசாயன தொடர்பான விபத்துக்களை சமாளிக்க சீன அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இதுதான் என சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.

2011 -ம் ஆண்டு தகவலின்படி 33,625 இரசாயன தொழிற்சாலைகள் சீன நாட்டின் கிழக்கு பகுதிகளில் இயங்கி வருகின்றன. இரசாயன தயாரிப்பு, இரசாயனங்களை சேமித்து வைப்பது மற்றும் ஆபத்தான இரசாயனங்களை அகற்றுவது தொடர்பாக புதிய விதிகளை அமல்படுத்திட சீன அரசாங்கம் தொடர்ந்து திணறி வருகிறது. 2011-ம் ஆண்டில் போடப்பட்ட விதிகளை மாற்றி புதிய விதிகளை சீன அரசு கொண்டுவர வேண்டும் என்பதையே இத்துறை வல்லுனர்களும் விரும்புகின்றனர்”.

இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply