பிரதமரின் புதிய பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு
பிரதமரின் பாதுகாப்பு செயலாளராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ண கினி நியமனம செய்யப்பட்டுள்ளார். பிரதமரின் பாதுகாப்பு செயலாளராக தற்போது இருந்து வரும் மலேய் குமார் சின்ஹா என்பவர் அடுத்த வாரம் ஓய்வு பெறுகிறார். எனவே அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ண கினி நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
தேசிய குற்றப்பதிவுகள் துறையின் தலைமை இயக்குநராக பதவி வகித்து வரும் ராதாகிருஷ்ண கினி, பிகார் மாநிலத்தில் 1981-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ராதாகிருஷ்ண கினி பிரதமரின் புதிய செயலாளராக (பாதுகாப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த பதவியில் வரும் 2017ஆம் ஆண்டு நவம்பர் வரை இருப்பார் என்றும் அதன் பின்னர் அவர் ஓய்வு பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பாதுகாப்பு செயலாளர் வசம்தான் உள்ளது. இவர்தான் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) நிர்வாக தலைவராகவும் பணியாற்றுவார்.
Chennai Today News: IPS officer Radhakrishna Kini to monitor PM Modi’s security