ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜின்

ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜின்

14ரயில் எஞ்சின்கள் ஆரம்ப காலகட்டத்தில் நிலக்கரியால் இயக்கப்பட்டது. அதன் பின்னர் டீசலில் இயங்கிய ரயில் எஞ்சின் தற்போது மின்சாரத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில்  ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரெயில் என்ஜின் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் இந்த கண்டுபிடிப்பு தற்போது சாத்தியமாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை உருவாக்கியுள்ளது. இந்த ரெயில் என்ஜின் வரும் 2017ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஓடும் ‘கொராடியா லின்ட்’ என்ற பயணிகள் ரெயிலில் பொருத்தப்பட உள்ளது.

இப்புதிய வகை ரெயில் என்ஜினில் ஹைட்ரஜன் ‘டேங்க்’ அதன் கூரை மீது அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் எரிவாயு செல்கள் மின்சக்தியாக மாறி ரெயில் என்ஜினை இயக்குகிறது. இதன் மூலம் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரெயில் என்ஜினை தயாரித்த பெருமையை ஆல்ஸ்டம் நிறுவனம் பெற்றுள்ளது.

Leave a Reply