ராகுல்காந்தி மீது ஷூ வீச்சு. உத்தரபிரதேசத்தில் பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்த், அம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ராகுல் காந்தி மீது ஒரு வாலிபர் ஷு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபரை போலீஸார் விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர்.
ராகுல்காந்தி மீது அந்த வாலிபர் எதற்காக ஷூ வீசினார் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த இளைஞருக்கு மனநிலை சரியில்லை என்றும் கூறப்படுவதால் மருத்துவ சோதனை செய்ய போவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டி அம்மாநிலத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று சாலையோரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் மீது இளைஞர் ஒருவர் ஷு வை வீசியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை போலீஸார்