கோடிக்கணக்கானோர் டிவியில் பார்த்த ஹிலாரி-டிரம்ப் நேரடி விவாதம்.

கோடிக்கணக்கானோர் டிவியில் பார்த்த ஹிலாரி-டிரம்ப் நேரடி விவாதம்.

hilari-truimpஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இருவரும் நேரடி விவாதம் நடத்தும் நிகழ்ச்சி ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு தொடங்கியது. இந்த விவாதம் அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் மட்டுமின்றி உலகமே இந்த நேரடி விவாத்தை பார்த்து ரசித்தனர். மேலும் இருவருக்கும் இடையிலான 2-வது விவாதம் வரும் அக்டோபர் 9ஆம் தேதியும், இறுதி விவாத நிகழ்ச்சி அக்டோபர் 19ஆன் தேதியும் நடைபெறவுள்ளது.

முதல்கட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஹிலாரி கிளிண்டன், “ டிரம்பின் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்யும். குறைந்த சம்பளம் பெறுவோருக்கு வரி விதிப்பு குறைக்கப்படும். குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே டிரம்ப் ஆதரவளிப்பார்.வரிச்சலுகைகளை கொண்டு வருவதன் மூலம் நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும்” என்று குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை சீன நாட்டினரும் மெக்ஸிகோவை சேர்ந்தவர்களும் தட்டிபறிக்கின்றனர்.
வெளியுறவு அமைச்சராக இருந்த போது ஹிலாரி அமெரிக்காவின் நிலையை உயர்த்தவில்லை. வரிச்சலுகை மூலம் மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தப்படும்” என்று வாதாடினார். மேலும் இருவரும் மேலும் ஒருசில கருத்துக்களை சூடாக விவாதித்தனர்.

Leave a Reply