ராஜ்யசபா எம்பி ஆகிறார் இல.கணேசன். தமிழகத்திற்கு இன்னொரு மத்திய அமைச்சர்?
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த இல.கணேசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பாஜக மேலிடம் அரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் கவர்னராக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது பதவி காலியானது. இதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு இல. கணேசன் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதும், இல. கணேசனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.