இந்தியா vs நியுசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்

இந்தியா vs நியுசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்

cricketநியூசிலாந்து அணி இந்திய சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நாளை கொல்கத்தா மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் ஏற்பட்டுள்ளது. தொடக்க வீரர் ராகுல் காயம் அடைந்ததால் கவுதம் காம்பீர் அணிக்கு தேர்வாகி இருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் என்பதாலும், கொல்கத்தா மைதானத்தில் நீண்ட அனுபவம் பெற்ற காம்பீர் இந்த டெஸ்ட் போட்டியில் தனது திறமையை மீண்டும் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கான்பூரை போல கொல்கத்தா மைதானம் சுழற்பந்துக்கு சாதக இருக்காது என்பதால் அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்த போட்டியில் விக்கெட்டுக்களை விரைவாக வீழ்த்துவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

நியூசிலாந்து அணியை பொருத்தவரை மார்க் கிரேக் மற்றும் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீசம் ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே தொடரை இழக்காமல் தப்பிக்க முடியும் என்பதால் கேப்டன் வில்லியம்சன், லாதம், ரோஞ்சி, சான்ட்னெர் ஆகியோர் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply